1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 ஜூன் 2023 (11:23 IST)

சிறையில் இருக்கும் பாஜக உமா கார்கி மீண்டும் கைது: காவல்துறையினர் அதிரடி..!

பாஜகவை சேர்ந்த உமா கார்கி ஏற்கனவே சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
திமுக பெரியார் கருணாநிதி உள்ளிட்டவர் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் பாஜகவை சேர்ந்த உமா கார்கி கைது செய்யப்பட்டார். மேலும் அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட உமா கார்கியை மீண்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து ட்விட்டரில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
சிறந்த சமூக ஊடக செயல்பாட்டிற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடமிருந்து விருது பெற்ற அடுத்த நாளை உமா கார்கி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva