வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 18 ஜூலை 2022 (15:51 IST)

கிரிப்டோகரன்சிக்களை தடை செய்ய வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Nirmala
கிரிப்டோகரன்சிக்களை  தடை செய்ய வேண்டும் என்பதுதான் ரிசர்வ் வங்கியின் கருத்து என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் 
 
கிரிப்டோகரன்சி இந்தியாவின் நிதி நிலைமையை சீர்குலைத்து வருகிறது என்றும் அதனால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
 
இந்தியாவில் கிரிப்டோகரன்சி களை தடை செய்ய வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கியின் கருத்து என்று கிரிப்டோகரன்சி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி திருமாவளவன் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது