1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 21 மே 2022 (19:41 IST)

கலால் வரி குறைப்பு: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50 , டீசல் ரூ.7 குறையும்- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

PETROL
பெட்ரோல் டீசல் மீதாக கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து இன்று அவர் கூறியுள்ளதாவது:

சமையல் எரிவாயுவுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் எனவும், பெட்ரோல் ,. மீதான கலால் வரி ரூ.8 குறைக்கப்படும் எனவும், டீசல்மீதான கலால் வரி ரூ. 6 குறைக்கப்படும் எனவும் இதனால் சில்லறை விலையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50  குறையும் ; டீச லிட்டருக்கு ரூ.7 குறையும் என தெரிவித்துள்ளார். இந்த விலை குறைப்பால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், சமையல் எரிவாயுவுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 12 சிலிண்டருக்குள் வாங்கும் பயனாளிகளுக்கு மானியம் எனத் தெரிவித்துள்ளார்.