வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (09:49 IST)

தேசியக் கொடிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

India flag
அனைத்து வகையான தேசியக்கொடிகளுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட தேசிய கொடிகளுக்கும் தற்போது ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில் நாட்டின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் மூவர்ணக் கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது 
 
இதன் காரணமாக அனைத்து வகையான இயந்திரத்தில் துணியால் உருவாக்கப்படும் தேசியக் கொடிகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து தேசியக் கொடிகளுக்கு ஜிஎஸ்டி இல்லை என்பது உறுதியாகி உள்ளது.