வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 29 ஜூன் 2022 (18:28 IST)

எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு: விரிவான தகவல்

Nirmala
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்றும் இன்றும் நடந்த நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது
 
இதன்படி கிரைண்டர்களுக்கு 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது 
 
எல்இடி விளக்குகள் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது 
 
பேனா மை, பிளேடு, கத்தி, கரண்டி ஆகியவற்றுகளுக்கு 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது 
 
சூரிய ஒளி மூலம் இயங்கும் ஹீட்டர்களுக்கு  ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது 
 
இந்த வரி உயர்வு ஜூலை மாதம் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்