வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (08:23 IST)

தொழில் வளர்ச்சியில் சாதிக்கும் தமிழ்நாடு! – நிதியமைச்சரின் தரவரிசை பட்டியல்!

நாடு முழுவதில் உள்ள மாநிலங்களில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் குறித்த தரவரிசையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் தொழில் வளர்ச்சி மற்றும் தொழில் செய்ய உகந்த சூழல் உள்ள மாநிலங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரவரிசைப்படுத்தியுள்ளார்.

வர்த்தக சீர்திருத்த செயல் திட்டத்தை அமல்படுத்தியதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தரவரிசையில் தொழில் செய்ய உகந்த மாநிலங்களாக 7 மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது. தமிழகம் தவிர ஆந்திரா, குஜராத், தெலுங்கானா, அரியானா, கர்நாடகா, பஞ்சாப், ஆகிய மாநிலங்களும் இந்த தரவரிசையில் உள்ளன.

அதுபோல சாதிக்க துடிக்கும் மாநிலங்களாக அசாம், கேரளா, கோவா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.