1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Nirmala seetharaman reply to manmohan singh

பொருளாதாரம் பற்றி மன்மோகன் சிங் பேசுவதா? – நிர்மலா சீதாராமன் பதிலடி!

India
பாஜகவிற்கு பொருளாதாரம் குறித்த சரியான புரிதல் இல்லை என மன்மோகன் சிங் பேசியதற்கு நிர்மலா சீதாராமன் எதிர்வினையாற்றியுள்ளார்.

பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் “பாஜகவிற்கு பொருளாதாரம் பற்றிய சரியான புரிதல் இல்லை. நாட்டில் எது நடந்தாலும் நேருவையே குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்” என்று பேசியிருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “தனது ஆட்சியில் 22 மாதங்களாக பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாதவர் பொருளாதார நிலை குறித்து பேசுவதா? மன்மோகன் சிங் போன்றவரிடம் இருந்து இந்த கருத்தை எதிர்பார்க்கவில்லை. அவரது கருத்து இந்தியாவை சிறுமைப்படுத்தும் வகையில் இருப்பது என்னை புண்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்த பில்கேட்ஸ்