1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Public demolish sub-standard bridge construction near Vellore

தரமற்ற பாலம்.. பொதுமக்களே இடித்து தள்ளியதால் வேலூர் அருகே பரபரப்பு...

வேலூர்
வேலூர் அருகே ஒடுகத்தூர் பகுதியில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம், தரம் குறைவாக இருப்பதாக கூறி பொதுமக்களே இடித்து தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பின்னத்துரை ஊராட்சி, பொம்மன்கொட்டாய் பகுதியில்  நீண்ட நாட்களாகக் கோரப்பட்ட இந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள், மிகவும் மோசமான நிலையில் நடைபெற்று வருவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
பாலம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சிமெண்ட் கலவை தரமற்றதாகவும், கட்டுமான பொருட்கள் குறைந்த தரத்தில் இருப்பதாகவும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து அந்த பாலத்தின் கட்டுமானத்தை இடித்து தள்ளினர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தரமற்ற முறையில் பாலத்தை கட்டுவதை நிறுத்திவிட்டு, தரமான முறையில் புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
Edited by Siva