செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (10:33 IST)

இன்று இரண்டாவது டி 20 போட்டி… வெற்றி பெற்று தொடரை தக்கவைக்குமா இந்தியா?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் இரண்டாவது டி 20 போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை ஒரு போட்டியைக் கூட  வெற்றி பெறவில்லை. ஒருநாள் தொடரை முழுவதும் இழந்து வொயிட்வாஷ ஆனது. அதையடுத்து கொல்கத்தாவில் தொடங்கிய டி 20 தொடரின் முதல் போட்டியையும் இழந்தது.

இந்நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி கொல்கத்தாவிலேயே நடக்க உள்ளது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் டி 20 தொடரையும் கைப்பற்றிவிடும்.