1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

இன்று 2வது டி20 போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நடைபெற உள்ளது
 
கொல்கத்தா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விட்டால் தொடரை வென்று விடும் என்பதால் இந்தியா இன்றைய போட்டியில் வெற்றி பெற தீவிர முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அதேபோல் தொடரை இழந்து விடாமல் இருக்க வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்