புதன், 6 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:40 IST)

மாநில போக்குவரத்து நிறுவனங்கள் லாபம் பார்க்க முடியாது: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

Nitin
மாநில போக்குவரத்து நிறுவனங்கள் டீசலில் பேருந்துகளை இயக்கினால் ஒருபோதும் லாபம் பார்க்க முடியாது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மாநில போக்குவரத்துக் கழகங்கள் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற வேண்டும் என்றும் அவ்வாறு மாறினால் பேருந்து டிக்கெட் விலை 30 சதவீதம் குறையும் என்றும் அவர் கூறினார் 
 
தற்போது மாநில போக்குவரத்துக் கழகங்கள் டீசல் பேருந்துகளை இயக்கி வருவதால் ஒருபோதும் லாபம் பார்க்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனவே மாநில போக்குவரத்து கழகங்கள் விரைவில் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகளை இயக்கி பொதுமக்களுக்கு குறைந்த டிக்கெட்டில் இயக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.