இப்படி இருந்தா லாபம் பாக்க முடியாது! – போக்குவரத்து கழகங்களுக்கு நிதின் கட்கரி அட்வைஸ்!
மாநில போக்குவரத்து கழகங்கள் லாபத்தில் இயங்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என நிதின் கட்கரி ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையே அந்தந்த மாநில அரசின் போக்குவரத்து கழகங்கள் பல்வேறு பேருந்துகளை இயக்கி வருகின்றன. ஆனால் பல மாநில போக்குவரத்து கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலை குறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி “தற்போது இருக்கும் நிலையில் போக்குவரத்து கழகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்தால் ஒருபோது லாபம் பார்க்கவே முடியாது. ஏனென்றால் பெரும்பாலும் அவை பேருந்துகளை டீசலில்தான் இயக்கி வருகின்றன. அதற்கு பதிலாக மாநில போக்குவரத்து கழகங்கள் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை இயக்க தொடங்கினால் டிக்கெட் விலையில் 30% வரை மக்களுக்கு குறைத்து வழங்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.