1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 ஜூலை 2022 (08:16 IST)

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்!

Petrol
சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63  எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்றாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 
 
மேலும் பெட்ரோல் டீசல் விலைக்கான வரியை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது