திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2019 (19:05 IST)

தமிழ்நாட்டை பாஜக கட்டாயப்படுத்த கூடாது – மம்தா பானர்ஜி ஆவேசம்

மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு ஏற்பட்டதுபோல மேற்கு வங்கத்திலும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸுக்கும், பாஜக வுக்கும் அங்கே சண்டை சச்சரவுகள் அதிகமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மும்மொழி கொள்கையை விமர்சித்து பேசிய மம்தா பானர்ஜி “ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி மொழிகள் உள்ளன. தனி பாரம்பரியம் உள்ளது. எனவே மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு நிர்ணயிக்க கூடாது. தமிழ்நாட்டை இந்தி கற்க சொல்லி பாஜக கட்டாயப்படுத்த கூடாது” என்று அவர்  தமிழ்நாட்டிற்கும் ஆதரவளித்து பேசியுள்ளார்.

மும்மொழி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு மாணவர்கள் ஹிந்தி படிப்பது கட்டாயமல்ல. விருப்பப்பட்ட ஒரு மொழியை தேர்வு செய்து படிக்கலாம் என மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.