பொங்கல் பண்டிகை.. தமிழகத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கரும்புகள்..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு கரும்பு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை விமான நிலையத்திலிருந்து காய்கறிகள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சார்ஜா செல்லும் விமானத்தில் கரும்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் செல்லும் விமானத்தில் ஒரு டன் கரும்பு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், அதேபோல் அபுதாபி விமானத்தில் கரும்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஷார்ஜாவில் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி போன்ற பகுதிகளில் தமிழர்கள் அதிகம் இருப்பதால், அங்கும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றும், அதற்காகவே கரும்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Mahendran