வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2019 (15:22 IST)

அந்த மாதிரி படங்களை வைத்திருப்பது குற்றமல்ல- கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த சில வருடங்கள் முன்பு கேரளாவில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு ஆணும், பெண்ணும் நின்று பேசி கொண்டிருந்தனர். அவர்களை போலீஸார் மடக்கி விசாரித்தபோது அவர்களது செல்போன்களை வாங்கி சோதித்தனர். அதில் அவர்கள் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள் அதிகளவில் இருந்தன. அதிர்ச்சியடைந்த போலீஸார் ”யார் இதை எடுத்தது?” என கேட்டபோது நாங்களே எடுத்துக் கொண்டோம் என கூறியுள்ளனர்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் “18 வயதுக்கு மேற்பட்ட ஆணோ, பெண்ணோ தங்கள் சுய ஆபாச படத்தை வைத்திருப்பது குற்றமாகாது. ஆனால் இதுபோன்று படங்கள் எடுத்து அதை வெளியில் விநியோகித்தாலோ, விளம்பரப்படுத்தினாலோ அது தவறு “ என்று கூறி அவர்களுக்கு தண்டனை தர மறுத்துவிட்டனர்.