1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 ஜூன் 2019 (20:30 IST)

12 நிதியமைச்சக உயரதிகாரிகள் பணிநீக்கம்: நிர்மலா சீதாராமன் அதிரடி

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கட்சி மீண்டும் தேர்தலில் விஸ்வரூப வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் கடந்த முறை ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், இந்த முறை நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.
 
இந்திராகாந்திக்கு பின் பொறுப்பேற்ற முதல் பெண் நிதியமைச்சர் என்பதால் அவரது தலைமையில் நிதி அமைச்சகம் பல அதிரடி முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சக உயர் அதிகாரிகள் 12 பேர் இன்று அதிரடியாக விருப்ப ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அதிரடி நடவடிக்கையால் நிதியமைச்சகமே பரபரப்பில் உள்ளது. இந்த உயரதிகாரிகள் எதற்காக விருப்ப ஓய்வுக்கு தள்ளப்பட்டனர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை என்றாலும் வெகுவிரைவில் இதுகுறித்த செய்திகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது