தொடர்புடைய செய்திகள்
- பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்வதில் சிக்கலா?
- பொங்கல் விடுமுறையுடன் ஜனவரி 13ஆம் தேதியும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
- புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரங்கள்..!
- விஜய் ஆண்டனி இசைக்கச்சேரிக்கு வருபவர்களுக்கு இலவச பயணம்.. சென்னை மெட்ரோ அறிவிப்பு..!
நாளை முதல் 4 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரங்கள்..!
சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜனவரி 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மாற்றப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 14 முதல் 16-ஆம் தேதி வரை ஞாயிறு விடுமுறை நேர அட்டவணையின் படி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும், ஜனவரி 17-ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஞாயிறு விடுமுறை நேர அட்டவணை பிரகாரம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ஜனவரி 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
அதன்படி, ஞாயிறு விடுமுறை அட்டவணை என்பது காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
