கற்பழித்த பெண்ணையே கல்யாணம் செய்து கொண்ட எம்.எல்.ஏ

tripura mla
Last Modified செவ்வாய், 11 ஜூன் 2019 (17:20 IST)
திரிபுராவில் தன்னால் கற்பழிக்கப்பட்ட பெண்ணையே எம்.எல்.ஏ ஒருவர் திருமணம் செய்து கொண்டது அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவில் உள்ள மாநில கட்சி திரிபுரா சுதேச மக்கள் முன்னணி. இந்த கட்சியின் உறுப்பினராக இருப்பவர் தனஞ்செய். 28 வயதே ஆன இவர் 2018ல் திரிபுராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது ராய்மா பகுதியின் எம்.எல்.ஏ வாக இருக்கிறார். இந்நிலையில் பெண் ஒருவர் தனஞ்செய் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கற்பழித்துவிட்டதாக போலீஸில் புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனஞ்செய் தான் அப்படி செய்யவே இல்லை. எதிர்கட்சிகள் என் நன்மதிப்பை கெடுப்பதற்காக இப்படி செய்கிறார்கள் என விடாப்பிடியாய் சாதித்தார். ஆனால் அவருக்கு எதிராக அந்த பெண் வலுவான ஆதாரங்களோடு நின்றார். திரிபுரா சுதேச மக்கள் முன்னணி கட்சியினர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டியதாய் போனது. அவர்கள் அந்த பெண்ணின் வாதத்தில் உள்ள உண்மையையும், தங்கள் கட்சியின் மானத்தையும் காப்பாற்ற அந்த பெண்ணை மணந்து கொள்ள சொல்லி தனஞ்செய்யிடம் அறிவுரை வழங்கினார்கள்.

இது குறித்து அந்த பெண் சொன்னபோது “நான் 2010ல் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே இருவரும் காதலித்து வந்தோம். அப்போது அவர் ஜிரானியாவில் கல்லூரி படித்து கொண்டிருந்தார். ஒரு வருடம் கழிந்த நிலையில் அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். பிறகு அடிக்கடி அவரது வீட்டில் ஒன்றாக இருந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் நானும் அதற்கு சம்மதித்தேன்” என்று கூறியுள்ளார்.

 அதன்பிறகு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த போது 2017 தேர்தல் பணிகள் தொடங்க ஆரம்பித்ததால் திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறார் தனஞ்செய். இப்படியே நாட்களை தள்ளி போட்டுக்கொண்டே போனவர் 2018ல் எம்.எல்.ஏ-வாகவே ஆகிவிட்டார். ஆனாலும் அந்த பெண்ணுக்கு ஒரு முடிவு தெரியவில்லை. அவர் எம்.எல்.ஏ ஆன பிறகு அந்த பெண்ணோடு பேசுவதையே நிறுத்தி கொண்டிருந்திருக்கிறார்.

அதன்பிறகு கல்யாணம் பற்றி அந்த பெண் கேட்க அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. அவர் தம்பி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று 8 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து, ”என் அண்ணன் உங்களை திருமணம் செய்து கொள்ள மாட்டார்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு பின் அந்த பெண் நேரடியாக சென்று போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

தற்போது தன் தவறுக்கு மன்னிப்பு கேட்ட தனஞ்செய் அந்த பெண்ணை மணந்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். அதன் பேரில் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தனஞ்செய் மேல் கொடுத்த வழக்குகளை திரும்ப பெற்றுக்கொண்டார் அந்த பெண்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :