தொடர்புடைய செய்திகள்
- கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கும் மேல் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!
- தடுப்பூசி போட்டுக்கிட்டா பிரியாணி மற்றும் பல பரிசுகள்! – பொதுமக்கள் வரவேற்பு!
- தமிழ் சினிமாவில் 4000 கோடி ரூபாய் வரை நஷ்டம்… ஆர் கே செல்வமணி தகவல்!
- கொரோனா இரண்டாம் அலை; 594 மருத்துவர்கள் உயிரிழப்பு! – இந்திய மருத்துவ சங்கம்!
- கொரோனா மரணம் இல்லாத நாள்… இங்கிலாந்து நிம்மதி பெருமூச்சு!
தொடர்ந்து 1.50 லட்சத்திற்கு கீழ் குறையும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தொட்டிருந்த நிலையில் தற்போது மெல்ல குறைந்து 2 லட்சத்திற்கும் கீழாக உள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,32,788 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,83,07,832 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 3,207 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 3,35,102 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,61,79,085 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 17,93,645 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 21,85,46,667 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
