வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (09:26 IST)

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கும் மேல் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கும் மேல் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!
தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக ஏற்கனவே ரஜினிகாந்த் அஜீத் உள்பட பல திரையுலக பிரபலங்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தயாரிப்பாளர் ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்து உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது 
 
தமிழக அரசு கொரோனாவுக்கு எதிராக எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து திரையுலகினர் நிதி உதவிகளை குவித்து வருகின்றனர். அந்த வகையில் சற்று முன் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் உள்பட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்த டாக்டர் ஐசரி கணேஷ் தனது மனைவி மற்றும் மகனுடன் சென்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தார்
 
அப்போது அவர் தனது சார்பாக ரூபாய் ஒரு கோடியே ஒரு லட்சத்திற்கான காசோலையை அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்பதும் டாக்டர் ஐசரி கணேஷ் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.