திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (08:57 IST)

தமிழ் சினிமாவில் 4000 கோடி ரூபாய் வரை நஷ்டம்… ஆர் கே செல்வமணி தகவல்!

கொரோனா ஊரடங்கால் தமிழ் சினிமாவுக்கு சுமார் 4000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் அதிகமாக பாதிக்கபப்ட்ட துறைகளில் சினிமாத்துறையும் ஒன்று. அரசின் அங்கிகரிக்கப்பட்ட தொழில் துறை இல்லை என்பதால் அரசிடம் பெரிதாக நிவாரண உதவிகளும் இந்த துறைக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர் கே செல்வமணி ‘ தமிழ் சினிமாவை நம்பி 60 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 200 படங்கள் வரை ரிலீஸாகி வந்தன. ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனாவால் கடுமையாக திரைத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனால் தொழிலாளர்களுக்கு அரசு உதவி செய்யவேண்டும். அரசு மட்டுமில்லாமல் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் முன்னணி தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லாம் முன்வர வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.