ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (13:26 IST)

பதவி விலகுவதாக அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்! டெல்லியில் சட்டமன்ற தேர்தல்?

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

 

 

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன் தினம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

 

ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அப்போது இன்னும் 2 நாட்களில் தான் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 

 

மக்கள் மன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் வரை முதலமைச்சர் நாற்காலியில் தான் அமரப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2025ம் ஆண்டு டிசம்பர் வரை உள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவை தொடர்ந்து ஆட்சி கலைக்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படலாம் என்பதால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K