வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (07:35 IST)

’ராட்சசன்’ பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

விஷ்ணு விஷால் நடித்த ’ராட்சசன்’ உட்பட சில திரைப்படங்களை தயாரிப்பாளர் டில்லி பாபு என்பவர் திடீரென காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி தமிழ் திரை உலகினரை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆக்ஸிஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்தவர் தயாரிப்பாளர் டில்லி பாபு.இவர் ராட்சசன், பேச்சுலர், ஓ மை கடவுளே உள்ளிட்ட சில படங்களை தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென டெல்லி பாபு நேற்று இரவு காலமானதாக வெளியாகி இருக்கும் செய்தி தமிழ் திரை உலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என திரை உலகை சேர்ந்தவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தயாரிக்க அவர் திட்டமிட்டிருந்த நிலையில் அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva