1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (15:04 IST)

டெல்லியில் உள்பட வட மாநிலங்களில் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!

earthquake
டெல்லி உள்பட வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுவதை அடுத்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
பாகிஸ்தானில் இன்று நண்பகல் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்  அளவில் 5.8 நிலையில் இந்த நிலநடுக்கம்  அண்டை நாடான இந்தியா ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த பொதுமக்கள் பதறி அடித்து வெளியே வந்து சாலையில் கூடி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் ஏற்கனவே நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
 
இந்த நிலையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் குறித்த சேத விவரங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran