ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (08:00 IST)

டெல்லி மாநகரப் பேருந்தில் பயணம் செய்த ராகுல் காந்தி: பயணிகள் கூறிய குறைகள்..!

டெல்லி மாநகர பேருந்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பயணம் செய்ததாகவும் அப்போது பயணிகள், கண்டக்டர்கள், டிரைவர்கள் சில குறைகளை கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் எம்பி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது சாமானிய மக்களை சந்தித்து வரும் நிலையில் சமீபத்தில் கூட செருப்பு தைக்கும் தொழிலாளி, லாரி ஓட்டுநர், டாக்ஸி ஓட்டுநர் ஆகியவர்களை சந்தித்து பேசினார்.

அந்த வகையில் நேற்று டெல்லி சரோஜினி நகர் பேருந்து பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பயணிகள் ஆகியவர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டார். அதன் பின் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’நமது ஜனநாயக சமூகத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் ஒவ்வொரு பிரிவினரையும் சந்தித்து அவர்களுக்காக குரல் எழுப்பி வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநகர பேருந்தில் ராகுல் காந்தி பயணம் செய்தது அவர் பயணிகளிடம் குறை கேட்டது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.



Edited by Siva