1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (12:11 IST)

டெல்லியில் நள்ளிரவில் டாக்சியில் பயணிக்க வேண்டாம்: சிங்கப்பூர் பெண் நெட்டிசன்..!

Taxi
சிங்கப்பூரை சேர்ந்த பிரபல வலைப்பதிவர் தனது சமூக வலைத்தளத்தில் டெல்லியில் நள்ளிரவில்   டாக்ஸியில் பயணம் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் மூன்று முக்கியமான விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று கூறிய அவர் முதலாவதாக நள்ளிரவில் டாக்ஸியை அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். டெல்லியில் தான் நள்ளிரவில் டாக்ஸியில் சென்றபோது டிரைவர் கூடுதலாக பணம் கேட்டதாகவும் அதை கொடுக்க மறுத்த போது தவறான இடத்தில் வேண்டுமென்றே இறக்கிவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது ஆக செல்போன் எண்ணை டாக்சி டிரைவரிடம் கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரை செய்துள்ளார். டெல்லியில் பயணம் செய்த போது தனது செல்போன் எண்ணை டாக்சி டிரைவரிடம் கொடுத்தபோது சில சிக்கல்களை சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இறுதியாக பணத்துக்கு பதிலாக கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் பரிந்துரை செய்துள்ளார். சிறிய கடைகளில் குறிப்பாக தெருவோர கடைகளில் பணம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றும் அவர் இந்த யோசனையை தெரிவித்துள்ளார்.

து குறித்து அவர் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ 20 லட்சம் பார்வையாளர்களுக்கும் அதிகமாக பார்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran