மகாராஷ்டிராவில் கல்லூரி விடைபெறுதல் விழாவில் பேசிக் கொண்டிருந்த மாணவி மாரடைப்பால் மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபமாக இளைஞர்கள் பலர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடையும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் அப்படியான ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தர்ஷிவ் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் 20 வயது மாணவி ஒருவர் படித்து இளங்கலை இறுதியாண்டு படித்து வந்துள்ளார். சமீபத்தில் அந்த கல்லூரியில் நடந்த ஃபேர்வெல் நிகழ்ச்சியில் மேடையில் அவர் பேசிக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவருக்கு சிறுவயதிலேயே இதய பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை நடந்ததாகவும், அதன் பிறகு அவர் இத்தனை ஆண்டுகள் நலமுடனே இருந்ததாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். Iந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் மாணவியின் இழப்பிற்கு பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K
महाराष्ट्र के धाराशिव से दिल दहला देने वाला वीडियो आया सामने! ????
— Ishani K (@IshaniKrishnaa) April 6, 2025
चेहरे पर मुस्कान, फेयरवेल स्पीच दे रही थी छात्रा, अचानक स्टेज पर गिरी और चली गई जान
हादसे गवाह हैं, जिंदगी का कोई भरोसा नहीं!#Maharashtra #VarshaKharat pic.twitter.com/2dsVnjUwdY