வியாழன், 10 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (09:22 IST)

கம்பீர் இடத்தில் இந்த ஜாம்பவான் வீரரா?... கே கே ஆர் அணியின் பலே திட்டம்!

உலகக் கிரிக்கெட்டின் தனித்தன்மை கொண்ட ஆளுமைகளில் ஒருவரான ரிக்கி பாண்டிங், ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக பயிற்சியாளராக பணியாற்றினார். அந்த அணி அவர் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றும் குறிப்பாக கடந்த மூன்று சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு கூட டெல்லி அணியை கொண்டு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் டெல்லி அணியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ராகுல் டிராவிட்டை அந்த அணிக்குப் பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. டெல்லி அணி இந்தியப் பயிற்சியாளர் ஒருவரை எதிர்நோக்குவதால் தன்னால் டெல்லி அணியோடு தொடர்ந்து பயணிக்க முடியவில்லை என ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரை கே கே ஆர் அணி, தங்கள் அணி ஆலோசகராக நியமிக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்கி பாண்டிங் ஆரம்ப சில சீசன்களில் கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த கம்பீர், சில மாதங்களுக்கு முன்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.