1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2024 (14:46 IST)

நம்பர் பிளேட் இல்லை.. ஹெல்மேட் இல்லை... சர்ச்சையில் சிக்கிய ராதிகா சரத்குமார்..!!

Radhika
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் ராதிகா மற்றும் சரத்குமார் ஹெல்மேட் அணியாமல் சென்று வாக்கு சேகரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இதேபோன்று, அதிமுக கூட்டணியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார். இதனால், விருதுநகர் தொகுதி நட்டசத்திர களமாக உருவாகியுள்ளது. 
 
இந்நிலையில் சிவகாசியில் ஈஞ்சார், நடுவப்பட்டி கிராமங்களுக்கு ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, வாகனத்தில் செல்வதற்குப் பதில் மக்களை நெருங்கி சந்திக்கும் நோக்கில் இருவரும் பைக்கில் சென்று வாக்கு சேகரித்தனர். சரத்குமார் பைக்கை ஓட்டிச் செல்ல பின்னால் அமர்ந்தவாறு ராதிகா, தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

 
சரத்குமார் மற்றும் ராதிகா ஜோடியாக பைக்கில் சென்றதை, கிராம மக்கள் வியப்புடன் பார்த்து மகிழ்ந்தனர். இதனையடுத்து வீடு வீடாக சென்றும் ராதிகா சரத்குமார் வாக்கு சேகரித்தார்.  இதனிடையே நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் ராதிகா மற்றும் சரத்குமார் ஹெல்மேட் அணியாமல் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.