1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. A new milestone in vehicle sales in India

இந்தியாவில் வாகன விற்பனையில் புதிய மைல்கல்!

இந்தியாவில் வாகன விற்பனையில் புதிய மைல்கல்
இந்தியா முழுவதும் வாகனங்களின் விற்பனை இந்தாண்டு ஜனவரியில் அதிகரித்துள்ளது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இங்கு செல்போன், வாகனங்கள், ஆடைகள், ஐடி நிறுவனங்கள், விளையாட்டு பொருட்கள் விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தைத் தொடங்கவும், இங்குள்ள பொருட்களுக்கான விற்பனை சந்தையைக் கைப்பற்றவும் போட்டியிட்டுக் கொண்டுள்ளன.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் வாகனங்களின் விற்பனை இந்தாண்டு ஜனவரியில் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மக்களிடையே வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில்,  இந்தாண்டு  ஜனவரி மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமான 15 சதவீதம் அதிகரித்துள்ளதுள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல் இருசக்கர வாகனங்களின் விற்பனை 15 சதவீதமும்,  3 சக்கர வாகனங்கள் 37சதவீதமும் பயணிகள் வாகனங்கள் 13 சதவீதமும், வர்த்தக வாகனங்களின் விற்பனை 0.1 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 
அடுத்த கட்டுரையில்
டெல்லி எல்லைப் பகுதியில் விவசாயிகள் 2 வது நாளாக போராட்டம்..