ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2024 (13:34 IST)

அமித் ஷா 'ரோடு ஷோ'..! பொன். ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு சேகரிப்பு..!!

Amithsha
கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து தக்கலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ மேற்கொண்டார். 
 
மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழக அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்கு மத்தியில் தேசிய தலைவர்களும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர்கள் மோடி, அமித் ஷா ஆகியோர் தமிழகத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ மேற்கொண்டார். 
 
கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தக்கலை பழைய பேருந்து நிலைய சந்திப்பு முதல் மேட்டுக்கடை வரை ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது பேசிய அமித் ஷா, கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணனை வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.


ஊழல் கட்சிகளான அதிமுக,  திமுகவை வருகிற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.