1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2024 (14:22 IST)

சிட்னியில் பயங்கரம்..! துப்பாக்கி சூடு - கத்திகுத்து தாக்குதல்..! 6-பேர் பலி..!!

Sydney
சிட்னியில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னி நகரின் போன்டி கடற்கரை அருகே  மிகப்பெரிய வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்திற்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், தனது கையில் கத்தியை வைத்துக்கொண்டு, அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டித் தாக்கியதாக சொல்லப்படுகிறது. 
 
இதைப் பார்த்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். பலரும் கடைகளுக்குள் கதவை பூட்டிக்கொண்டு பதுங்கியிருக்கிறார்கள். மேலும்  அந்த நபர் கையில் துப்பாக்கியையும் வைத்திருந்ததாகவும் கண்மூடித்தனமாக அங்கிருந்தவர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆறு பேர் பேர் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

 
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், அந்த மர்ம நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் அவர் பலியானாரா இல்லையா என்பது தெரியவில்லை என்றும் அங்கிருந்து வரும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது