திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் 3 டன் பூக்களைக் கொண்டு நாளை புஷ்ப யாகம் நடைபெற உள்ளது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் நாளை திருமலைக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கார்த்திகை மாதத்தில் பெருமாளின் ஜென்ம நட்சத்திர தினமான சனிக்கிழமை அன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு புஷ்ப யாகம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நாளைய தினம் அந்த...