உறக்கத்திலேயே இறந்த பிரபல நடிகை.. 1 மாதத்திற்கு பின் தகவலை வெளியிட்ட குடும்பத்தினர்..
பிரபல நடிகை அனன்யா ராஜ் கடந்த ஜூலை 15-ஆம் தேதி தனது உறக்கத்தில் அமைதியாக காலமானார். அவருக்கு வயது 35.
'தக்கதே லே', 'செவன் ஹவர்ஸ் டூ கோ', 'கோஸ்ட்' மற்றும் 'தி ஃபைனல் எக்சிட்' போன்ற பல படங்களில் நடித்து அறியப்பட்டவர் அனன்யா மேலும், டி-சீரிஸ், ஜீ மியூசிக் போன்ற முன்னணி நிறுவனங்களின் மியூசிக் வீடியோக்களிலும் இவர் நடித்துள்ளார்.
அவரது மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தினர் இன்ஸ்டாகிராம் மூலம் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் கடுமையான உடல் மற்றும் மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனுடன் ஒரு வீராங்கனை போலப் போராடியதாகவும் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒரு மாதத்திற்குப் பிறகு அவரது இறுதிச் சடங்கு புகைப்படங்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். அனன்யா ராஜின் இழப்பு திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
