என்னா படம்!.. வேறலெவல்!.. DC படத்தை பாராட்டி தள்ளிய அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு!...
கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ, கூலி ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் டிசி. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கடந்த 7ம் தேதி வெளியானது.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று டிசி திரைப்படம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்து ஒரு வெற்றிப் படமாக மாறியிருக்கிறது.
இந்நிலையில், இந்த படத்தை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் மகேஷ்பாபு இருவரும் பாராட்டியிருக்கிறார்கள். அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் தளத்தில் டிசி படம் தொடர்பாக பதிவிட்ட போது டிசி ஒரு கிளாசிக் தமிழ் திரைப்படம்.. சினிமாவை விரும்பும் எல்லோரும் இந்த படத்தை விரும்புவார்கள்.. இந்த படம் ஒரு கவிதை போல இருந்தது.. டிசி பட குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அருண் மாதேஸ்வரன் மற்றும் அனிருத் ஆகியோரின் வேலை சிறப்பாக இருக்கிறது. அதேபோல் வாமி கபியின் நடிப்பு வேறலெவல். என்னுடைய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்திற்கு பெரிய தூண் என பதிவிட்டிருக்கிறார்.
அதேபோல் மகேஷ் பாபு தனது எக்ஸ் தளத்தில் ஒரிஜினல் மற்றும் சிறப்பான திரைப்படம் டிசி.. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன்.. படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள் என பதிவிட்டிருக்கிறார்.இதற்கு லோகேஷ் கனகராஜ், அனிருத்தம் ஆகியோர் அவருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.