இளம் கிரிக்கெட் வீரர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் செளராஷ்டிரா அணிக்காக விளையாடி வந்தவர் இளம் பேட்ஸ்மேன் அவி பரோட்(29). இவர் நேற்று வீட்டில் இருந்தபோது, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் குடும்பத்தினரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே மரணம் அடைந்தார். அவரது மனைவி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
அவரது மறைவுக்கு ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.