செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 16 அக்டோபர் 2021 (14:39 IST)

கிரேவி சாப்பிட்டதால் தாய் மகள் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்பன் நகரில் வசித்து வருபவர் இளங்கோவன். இவரது மனைவி கற்பகம்(38). இவர்களது மகள் தர்ஷினி(7).

கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி அன்று கற்பகம் தனது மகள் தர்ஷினியுடன் கோவிலப்ட்டி கடலையூர் சாலையில் உள்ள தனியார்  உணவகத்திற்குச் சென்ரு புரோட்டா சாப்பிட்டார். பின்னர் அருகேயுள்ள கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.

 இதையடுத்து இருவரும் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது, தாயும், மகளும் மயக்கம் அடைந்தனர்.  அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களின் உடல்நிலை மோசம அடையவே அவர்களை பாளையங்கோட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறினர். ஆனால் ஒருவரும் போகுன் வழியிலேயே உயிரிழந்தனர்.  இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.