1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 அக்டோபர் 2021 (10:32 IST)

நானே வருவேன் புதிய போஸ்டரை வெளியிட்ட செல்வராகவன்! இன்று முதல் படப்பிடிப்பு!

நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்துக்கான திரைக்கதை மற்றும் பாடல் மெட்டமைப்பது ஆகிய பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டு வந்தார்.

ஆகஸ்ட் மாதமே தொடங்க இருந்த படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டு வந்த நிலையில் இப்போது இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து இன்று படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.