செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. சிபிஎல் 2020
Written By sinoj
Last Modified: சனி, 16 அக்டோபர் 2021 (12:57 IST)

’தல’ தோனி புதிய உலக சாதனை

சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனை அடுத்து தல தோனிக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிபெற்ற பின்னர் பேசிய தல தோனியின் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் அறிமுகமாக உள்ள நிலையில் பிசிசிஐ முடிவை பொறுத்து தனது ஐபிஎல் எதிர்காலம் அமையும் என தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்றைய போட்டியில் 300 வது முறையாக டி-20 போட்டியில் தோனி கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதுவரை யாரும் இத்தனை போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டதில்லை என்பதால அவரது சாதனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.