1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2024 (16:13 IST)

சேப்பாக்கத்துல முடியாதது சின்னசாமி ஸ்டேடியத்தில் முடியுமா? கொல்கத்தாவை வீழ்த்துமா RCB?

RCB vs KKR
இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் நிலையில் ஆர்சிபி அணி வரலாற்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றிபெற்று ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் போட்டியிலேயே வென்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இரண்டாவது வெற்றிக்காக இரண்டு அணிகளுமே தீவிர மோதலில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொண்ட ஆர்சிபி இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வென்றதே இல்லை. அந்த ரெக்கார்ட் இன்னும் தொடர்கிறது. இந்நிலையில் இன்று RCB vs KKR போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு ஆர்சிபி அணி கொல்கத்தாவை தனது ஹோம் க்ரவுண்டில் வைத்து வென்றதே இல்லை. இந்நிலையில் இன்று அந்த ரெக்கார்டை உடைத்து ஆர்சிபி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


கொல்கத்தா அணியில் பில் சால்ட், சுனில் நரேன் தொடங்கி ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல் வரை பட்டியலில் வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கடந்த போட்டியில் ஆண்ட்ரே ரஸல் விக்கெட், ரன் என இரண்டிலும் கலக்கினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விராட் கோலி, டூ ப்ளசிஸ், மேக்ஸ்வெல் என நல்ல பேட்ஸ்மேன்கள் பலர் உள்ளனர். ஆனால் கடந்த போட்டியில் விராட் கோலியும், தினேஷ் கார்த்திக்கும்தான் ஓரளவு நின்று விளையாடி அணியை வெற்றி பெற செய்திருந்தனர். இந்நிலையில் இந்த போட்டி இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Edit by Prasanth.K