1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 23 மார்ச் 2024 (22:14 IST)

IPL-2024: சிக்ஸர் மழை பொழிந்த ரஸல்...ஹைதராபாத்திற்கு வெற்றி இலக்கு இதுதான்!

Andre Russell
ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 208 ரன்கள் குவித்துள்ளது.
 
ஐபிஎல் 2024 தொடரில் இன்றைய 2 வது நாள் ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக  கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. எனவே முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.
 
இதில், சால்ட் 54 ரன்னும், ராமன்தீப் சிங் 35 ரன்னும், ரிங்கு சிங் 23 ரன்னும், ரஸல் 25 பந்துகளில் 3 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடித்து 64 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
 
எனவே  20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 208 ரன்கள் எடுத்து, ஐதராபாத் அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
 
ஹைதரபாத் அணி தரப்பில்,  நடராஜன் 3 விக்கெட்டும், ஜபேட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும், மார்கண்டே 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.  தற்போது ஹைதரபாத் அணி 5.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களுடன் விளையாடி வருகிறது.