வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (22:34 IST)

விராட் கோலியின் குழந்தைக்கு கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின்  குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், சமீபத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் சிலர் கேப்டன் விராட் கோலியின் 9 மாதக் குழந்தைக்குக் கொலைமிரட்டல் விடுக்கும் வகையிலும் ஆபாசமான முறையில் மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவிட்டனர்.  இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென டெல்லிக் காவல்துறையை மாநில மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
2