செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (12:14 IST)

ஷமியை திட்டுபவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள்! – விராட் கோலி ஆவேசம்!

பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்த விவகாரத்தில் முகமது ஷமியை தொடர்பு படுத்துவது குறித்து கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவதாக களம் இறங்கிய பாகிஸ்தான் விக்கெட்டே இழக்காமல் 152 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பந்து வீசிய இந்திய பவுலர்களில் முகமது ஷமி அதிகபட்சமாக 4 ஓவர்களுக்குள் 43 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இதுகுறித்து அவரது அடையாளம் குறித்து பலரும் சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் பேசியுள்ளனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பேசியுள்ள அணி கேப்டன் விராட் கோலி “முகமது ஷமியை விமர்சிப்பவர்கள் முதுகெலும்பற்றவர்கள். இந்திய அணிக்காக முகமது ஷமி பல்வேறு வெற்றிகளை தேடி தந்துள்ளார். ஒருவரை அவரது மதத்தை வைத்து விமர்சிப்பது அநாகரிகமானது. இப்படியான நபர்களுக்காக கருத்து தெரிவித்து நேரம் செலவிட எனக்கு விருப்பமில்லை” எனக் கூறியுள்ளார்.