புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (13:34 IST)

ஆரம்பமே அதிரடி காட்டிய ஷ்ரேயாஸ் ஐயர் – மிடில் ஆர்டரை வலுப்படுத்திய இந்தியா

நேற்று நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக விளையாடிய இந்திய அணி வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வெஸ்ட் இண்டீஸுடன் இந்தியா விளையாடி வரும் சுற்றுப்பயண ஆட்டத்தின் ஒருநாள் போட்டி ஓவலில் குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முந்தினம் நடக்க இருந்த முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இரண்டாவது ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலாவதாக இந்தியா பேட்டிங் செய்தது. இரண்டாவதாக வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தபோது மழை பெய்ய தொடங்கியதால் டி.எல்.எஸ் முறையில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய அணியில் மிடில் ஆர்டர் வலுவாக இல்லை என பல விமர்சகர்கள் விமர்சித்த நிலையில், புதிதாக களம் இறக்கப்பட்டார் ஷ்ரேயாஸ் ஐயர். ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கான தகுதிகளுடன் சிறப்பான ஆட்டத்தை தந்தார் ஷ்ரேயாஸ். கோலியுடன் பார்ட்னர்ஷிப் வைத்து ஆடிய ஷ்ரேயாஸ் 68 பந்துகளில் 71 ரன்கள் அடித்தார். கோஹ்லி 125 பந்துகளில் 120 ரன்கள் அடித்தார்.

கோஹ்லி-ஷ்ரேயாஸின் பார்ட்னர்ஷிப் நேற்றைய இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது. ஷ்ரேயாஸின் இந்த அதிரடி ஆட்டம், இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலிமை பெற்றுள்ளதற்கான அடையாளமாகவே பார்க்கப்படுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.