1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (06:12 IST)

விராத் கோஹ்லியின் சதம், புவனேஷ்வரின் 4 விக்கெட்: இந்தியா அபார வெற்றி!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 279 ரன்கள் எடுத்தன. விராட் கோலி அபாரமாக விளையாடி 120 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 71 ரன்களும் எடுத்தனர் 
 
இதனை அடுத்து மழை பெய்ததால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 46 ஓவர்களில் 170 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு அளிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓவர்களில் 210 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் அந்த அணி 59 ரன்கள்வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியில் லீவீஸ் 65 ரன்களும், பூரன் 42 ரன்களும் எடுத்தனர் 
 
நேற்றைய போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 14ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது