திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (17:55 IST)

ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸை தோற்கடிக்குமா இந்தியா – இன்று மோதல்

வெஸ்ட் இண்டீஸ் சுற்று பயண ஆட்டத்தில் உற்சாகமாக ஆடி வருகிறது இந்திய அணி. 3 சுற்று கொண்ட 20 ஓவர் ஆட்டத்தில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற நிலையில் தற்போது ஒருநாள் போட்டியில் மோதுகிறது இந்திய அணி.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயண ஆட்டம் மேற்கொண்டு வருகிறது. 20 ஓவர் ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஒருநாள் போட்டிகள் ஆரம்பித்துள்ளன.

ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டம் இன்று மாலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. 20ஓவர் ஆட்டத்தை போலவே ஒருநாள் ஆட்டத்திலும் இந்தியா சாதனை படைக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஷிகார் தவான் திரும்ப வந்திருந்தாலும் காயம் காரணமாக அவர் 20 ஓவர் ஆட்டங்களில் சிறப்பாக விளையாட முடியவில்லை. இருந்தாலும் இன்றைய ஆட்டத்தில் அவரது பங்களிப்பு மிகவும் எதிர்பார்க்கப்படுறது.

மேலும் இன்றைய ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் க்ரிஸ் கெய்லின் 300வது ஆட்டமாகும். முன்னாள் வீரர் பிரையன் லாரா 299 ஒருநாள் போட்டிகளில் ஆடியதே உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில் அந்த சாதனையை முறியடிக்க இருக்கிறார் கெய்ல்.

பல்வேறு சாதனைகளை படைக்க கூடிய களமாக இந்த ஆட்டம் இருப்பதால் இரு தரப்பு வீரர்களும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.