வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (09:57 IST)

சஞ்சு சாம்சனை வாங்க முயல்கிறதா சிஎஸ்கே அணி நிர்வாகம்?

ஐபிஎல் போட்டித் தொடர் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில் அந்த சாதனையை சிஎஸ்கே சமன் செய்துள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்காக வாங்க முய்றசிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. இதை பிரசன்னா எனும் கிரிக்கெட் விமர்சகர் சொல்லவே, அந்த தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

சமீபத்தில் தோனி முழங்கால் வலியால் அவதிப்பட்ட நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனால் அவரால் அடுத்த சீசன் விளையாட முடியுமா என தெரியவில்லை. இந்த காரணத்தால் மாற்று விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்க முயற்சிக்கலாம் என சொல்லப்படுகிறது.