திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 31 மே 2023 (21:11 IST)

காயத்திற்கு சிகிச்சை பெறவுள்ள தோனி

Thala Dhoni
ஐபிஎல் -2023, 16 வது சீசன் இறுதிப் போட்டியில் சென்னை கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், தோனி காயத்திற்கு சிகிச்சை பெறவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் போட்டி  நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள  நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

இதில், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   5வது முறையாக  வென்றது.

இதையடுத்து, வெற்றிக் கோப்பையுடன் இன்று சென்னை கிங்ஸ் அணி வீரர்கள்   நேற்றூ மதியம் சென்னை வந்தடைந்தனர். இவர்களுக்கு விமான  நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐபிஎல்- போட்டியில் சென்னை கிங்ஸ் அணி வென்ற சாம்பியன் பட்டத்தை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் கோப்பையை வைத்து சிஎஸ்கே நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்தனர்.
.
இத்தொடரின் லீக் போட்டியின் போது தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. சில போட்டிகளில் விக்கெட் கீப்பிங்  அவர் செய்யும் போது இதை பார்க்க முடிந்தது.  இக்காயத்திற்குத் தற்காலிக சிகிச்சை எடுத்த வண்ணம் இறுதிப் போட்டிவரை அணியை சிறப்பாக வழிநடத்தி விளையாடினார்.

இந்த நிலையில், முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு விரைவில் தோனி சிகிச்சை பெற உள்ளார்.  இன்னும் ஒரு வாரத்தில், மஹாராஷ்டிர மாநிலம் கோகிலாபெண் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  அவர் சிகிச்சை பெற உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.