திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (08:49 IST)

தோனி வின்னிங் ஷாட் ஆடியிருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் பரபரப்பான நிமிடங்கள் பார்ப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக்கையே வரவைக்கும் அளவுக்கு இருந்தன. பொதுவாக உணர்ச்சிகளை வெளிக்காட்டாத தோனியே இந்தமுறை ஆனந்த கண்ணீரில் நிறைந்தார்.

இந்நிலையில் இந்த போட்டி பற்றி பேசியுள்ள சுனில் கவாஸ்கர் இந்த போட்டியில் தோனி களத்தில் நின்று இறுதி ரன்களை அடித்திருந்தால் கொண்டாட்டம் வேறு மாதிரியாக இருந்திருக்கும் எனக் கூறியுள்ளார். இந்த போட்டியில் தோனி முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.